Thursday, November 11, 2010

" காரணப் பெயர்கள் "

ஊர்ந்து வந்து சேர்ந்து வாழத் தொடங்கிய இடம் " ஊர் ".
ஊர்கள் வளர்ந்து  நகர்ந்து வந்து இணைத்தபோது அது " நகரம் ".
புனிதமான உறவு முறை தர்மங்கள் வரையறுக்கப்பட்டு,
தந்தை வழியில், சொத்தில் பங்கு பெறுபவர்கள்  " பங்காளி ".
தாயை ஆதியாக வைத்து விளைந்த உற்வு முறையில் "தாயாதி".
சக உதரன் என்ற ரத்த சம்பந்தமானவர்கள் " சகோதரன் ", ' சகோதரி'.

போகி, பொங்கல் , மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்
என்ற வரிசையில் காரணங்கள் ஒட்டிப் பிறந்தவைதான்.
போகம் என்றால் விளைச்சல்.  -
ஒரு போகம், இரண்டு போகம், மூன்று போக அறுவடைஎன்பார்கள்.
போகம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் இன்பம் துய்ப்பது. -
போகி என்றால் சுகத்தை அனுபவிப்பவர்.

மனதில் எழும் எண்ணங்களுக்கு ஒரு உருவம் கொடுப்பது எழுத்து.
அசைத்தல் என்றால் கட்டுதல் என்று ஒரு அர்த்தம் உண்டு.
எழுத்துக்களை இணைத்துக் கட்டி நடக்கச் செய்வதால் அசை என்று பெயர்.
சீர் என்பது தாளத்துக்குப் பெயர். -
வரையறையான ஒசையே தாளம் ( Rhythm )
செய்யுட்களில் வார்த்தைகளை சீராகப் பிரித்து
தாள கதியில் அமைப்பதால் சீர் ஆயிற்று.
" தளை " : - தளையிடுவது என்றால் பிணைப்பது .
தளை ஒரு சீரை இன்னொரு சீருடன் பிணைக்கும் வார்த்தை.
அடுத்து அடுத்து வருவதால் அது "அடி" ஆயிற்று. -
தொடுக்கப் படுவது  என்பதால் " தொடை " -
தொடுக்கும் மாலைக்கும் தொடை என்று பெயர்.
மாலை அணிவித்தல் அழகு செய்வதற்கு.
செய்யுளை அழகு செய்ய எட்டு வித தொடைகள் உண்டு.
அதில் எல்லோரும் அறிந்த எதுகை, மோனை தவிர இயைபு, முரண்,
அளபெடை, அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை மற்றும் செந்தொடை.
செய்யுள் இலக்கணத்தை யாப்பிலக்கணம் என்பார்கள்.  -
" யாத்தல் " என்றால் " கட்டுதல் " என்று பொருள்.
நாட்டுப் பாடல்கள் இயற்றும் படைப்பாளிகளை,
" பாட்டுக் கட்டுகிறவர்கள் " என்றுதான் அழைப்பர்.

இந்த செய்யுள் உறுப்புக்கள் ஒன்றை ஒன்று சார்ந்து
உடல் உறுப்புக்கள் போலச் செயல்படும்.
எழுத்தினால் ஆனது அசை ------
அசையினால் ஆனது சீர் ----------
சீர்களால் ஆனது அடி -----
அடிகளால் ஆனது பாட்டு.
தளை உடல் உறுப்புக்களை இணைக்கும் எலும்பு, தசை நார் போல.
எதுகை மோனை போன்றவை அழகு செய்யும் தொடை வகையறா.
 ( உடலுக்கு மேல் உள்ள ஆடை அணிகலங்கள் போல.)

இந்த உடல் போன்ற கவிதை உருவத்துக்கு உயிர்
கவிதையின் உட்பொருளான கருத்து. (சொல்ல வரும் விஷயம்.)

" இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று "
எதுகை மோனை போல இசை இன்பம் தரும் ஓசை அமைதி
பிழைகள் தெரியாது மறைத்து விடும்.

பண்டிதனுக்கு இலக்கணம் முக்கியம்.  -
பாமரனுக்கு இசை இன்பம் முக்கியம்.
 To continue ...

No comments:

Post a Comment