Thursday, October 7, 2010

" புதிர் பாட்டு "

" சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்
  நீதி வழுவா, நெறி முறையில்
  இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்
  பட்டாங்கில் உள்ளபடி. "


பாடிவிட்டுப் போன அவ்வை 
கோடி மட்டும் காட்டிடுவார்.
மூடி வைத்த முழுக்கருத்தும் 
தேடினால்தான் தெரியவரும்.

 யார் இந்த இட்டார் ..? ...
எவர் அந்த இடாதார்.. ?

இட்டார் பெரியோர் இதிலேதும் ஐயமில்லை.
இடாதார் இழிகுலத்தோர் ஏனென்று தெரியவில்லை?
பெறுவார் பற்றிய பேச்சேயில்லை !  
இது புதிரா? பாட்டா? அல்லது புதிர்ப் பாட்டா?.. 
எனக்குப் புரியவில்லை.

பிச்சையிடும் பேரெல்லாம் பெருமகனார் ஆனலும்
இச்சையில்லை என்பாரும் இழிமகனாய் போவாரோ?
ஏற்பது இகழ்ச்சியென்று எல்லோரும் எண்ணிவிட்டால்
பெறுவதற்க்கு ஆளின்றி இடுவான்தான் எங்கு போவான்?
இடாதான் எனப் பெயர் வாங்கி இழிமகனாய் ஆவானோ !! 

 யார் இந்த இட்டார் ..? ...
எவர் அந்த இடாதார்..?

ஆண் ஒரு சாதி, பெண் ஒரு சாதி, 
ஆண்டவனே ஒரு அர்த்த நாரி,
அதையும் தாண்டி அதென்ன சாதி !
புலவர் கூறும் புது இரு சாதி? 

அவ்வை வாக்குப் பொய்க்காது..
ஆராயாமல் புரியாது...
பொருள் இல்லாமல் புதிர் இல்லை,
சுலபம் என்றால் சுவை இல்லை.

விடை தெரியாக் கேள்விக்கு, 
விடை தேடிப் புறப்பட்டேன்..
வீடு விட்டு வீ தி வந்தேன்...
காடு மலை கடந்து சென்றேன்...
விடுகதைக்கு விடை காண,
இடைவிடாது சிந்தித்தேன்..

இயற்கையெனும் புத்தகத்தை,
இறுதிவரை படித்து விட்டேன்
இலை மறைவுக் காய் மறைவாய்,
நீதி பல நிறையக் கண்டேன்
கண்டவற்றை விண்டுரைக்க,
கற்றவுர் முன் வந்து விட்டேன்.

யார் இந்த இட்டார் ..? ...
எவர் அந்த இடாதார்..?

see the continuation under the title as
" புதிருக்கு விடை தேடி ..." 






1 comment:

  1. பொருள் இல்லாமல் புதிர் இல்லை,
    சுலபம் என்றால் சுவை இல்லை-romba correct

    wating to know the வீடை:-)

    ReplyDelete