This one is the continuation of the earlier one sent
under the title : - " புதிர் பாட்டு ".
under the title : - " புதிர் பாட்டு ".
"நீதி வழுவா நெறி முறையில்"
என்று சொன்ன அவ்வை
இட்டார் இடாதார் என்று
எதற்காகப் பிரித்து வைத்தார் ?
பெரியோர் சிறியோர் என்ற
பிரிவினையின் பொருள் என்ன ?
கற்றோரே சற்று நின்று
காரணத்தை யோசியுங்கள்.
மனக்கதவைத் திறந்துகொண்டு
கற்பனையில் மிதந்து கொண்டு
சுற்றுமுற்றும் உற்றுநோக்கி
காணுகின்ற காட்சி எல்லாம்
மௌன மொழி பேசுவதை
என்னவென்று கேளுங்கள்.
தடுமாற்றம் இல்லாத
இடமாற்றம் என்பதுவும்
இடமாற்றம் என்பதுவும்
கால ஓட்டம் உருவாக்கும்
உருமாற்றம் என்பதுவும்
உருமாற்றம் என்பதுவும்
இயற்கையின் விதியின் கீழ்
இயங்குகின்ற இயக்கம் என
இனியாவது உணருங்கள்.
இடுவதுவும் பெறுவதுவும்
இடுவதுவும் பெறுவதுவும்
இடம் மாறும் இரு செயல்கள்
இது அன்றி அது இல்லை
இனம் பிரித்துப் பார்ப்பதில்லை.
தான் பெற்ற தண்ணீரை
தனதென்று கொள்ளாமல்
ஆழ்கடலும் அளித்திடுமே
வான்முகிலை வாழவைக்க.
தாழ்நிலையில் தானிருந்தும்
தானங்கள் தருவதனால்
அலை கடலும் உயர்குலமே
தர மறுத்தால் தாழ்குலமே.
உயர் நிலையில் உலவுவதால்
உயர்குலமாய் ஆவதில்லை
கரம்நீட்டிப் பெறுவதற்க்கு
சிரம்தாழ்த்தும் வெண் மேகம்.
உப்பு நீரை உருமாற்றி
உலகமெல்லாம் உவந்தளிக்கும்
கார் முகிலும் உயர்குலமே
தர மறுத்தால் தாழ்குலமே.
மண்மகளும் மலைமகளும்
மழைநீரைத் தான்பெறுதல்
பயிர்வாழ உயிர்வாழ
பலருக்கும் பகிர்ந்தளிக்க
நீரோடை சிற்றாறு நதிதீரப் பட்டாடை
ஏரி குளங்களென ஏராள அணிகலங்கள்
அணிந்து நிற்கும் நில மடந்தை
தரமறுத்தால் தாழ்குலமே.
கழிநீரை இளநீராய் தருகின்ற தென்னைபோல்
பதநீரை உருவாக்கிப் பாதுகாக்கும் பனையுண்டு
நிழல்தந்து அரவணைக்கும் ஆலவேப்ப மரங்களுண்டு
பலனையெதிர் பார்க்காமல் பயன்தரும் கனிமரங்களுண்டு.
மண்ணின் மீது எழுந்தவை எல்லாம்
மறைந்து மண்ணில் புதையுமுன்னர்
மறைந்து மண்ணில் புதையுமுன்னர்
பிறர்வாழ உணவாகும் இயல்பான தன்மையிலே
இறைவன் மறைந்து இருப்பது காணிர்.
இயற்கையன்னை படைப்பினிலே
இருக்குமினம் ஒருகோடி
இருக்குமினம் ஒருகோடி
கண்ணுக்குத் தெரியாத
நுண்ணினங்கள் பலகோடி.
நுண்ணினங்கள் பலகோடி.
வளமான செல்வங்கள்
பலவாகப் படைத்த அன்னை
பலவாகப் படைத்த அன்னை
அளவாகப் பங்கிட்டு
அளிப்பதற்கு வருவதில்லை.
அளிப்பதற்கு வருவதில்லை.
தான் என்றும் தனதென்றும்
தனக்குநிகர் யார் என்றும்
தனக்குநிகர் யார் என்றும்
தருக்குடனே தலை நிமிர்ந்து
தான்செல்லும் மனித இனம்
தான்செல்லும் மனித இனம்
தேசமென்றும் மொழியென்றும்
மதமென்றும் குலமென்றும்
மதமென்றும் குலமென்றும்
நேசமில்லா பிரிவினங்கள்
பலவாகிப் பிரிந்த பின்னால்..
பலவாகிப் பிரிந்த பின்னால்..
ஆறறிவு ஜீவன்கள்
அமைதியின்றி அலையும் போது
அமைதியின்றி அலையும் போது
ஐந்தறிவும் அதற்கும் கீழே
ஓரறறிவு மட்டும் பெற்ற
ஓரறறிவு மட்டும் பெற்ற
உயிரினங்கள் அனைத்திலுமே
உயர்வு தாழ்வு ஏதுமின்றி
உயர்வு தாழ்வு ஏதுமின்றி
செய்கின்ற செயல்களிலே
பற்று இல்லா பண்புடனே
ஓப்புரவும் ஒற்றுமையும்
ஒன்று சேரும் தன்மை அறிவீர்.
பற்று இல்லா பண்புடனே
ஓப்புரவும் ஒற்றுமையும்
ஒன்று சேரும் தன்மை அறிவீர்.
உயர்ச்சியென்றும் தாழ்ச்சியென்றும் ஓயாமல் பேசி விட்டு
ஒதுங்கி நின்று தாழ்ந்து விட்ட உத்தமரே உணருங்கள்.
நீதி வழுவா நெறி முறையில் தானாக இயங்கும் தன்மையிலே
மீதி மிச்சம் எச்சம் இல்லா கொடுக்கல் வாங்கல் கண்டிடுவீர்.
எல்லோரும் ஓரினம் என்கின்ற வாதம்
இயற்கையின் இயல்புக்கு என்றும் விரோதம்
விதைக்கு விதை வேறுபடும் விந்தையான உயிரினம்
சிதைந்து உயிர் பிரிந்துவிட்டால் சேர்ந்துவிடும் ஓரினம்.
இடுவாரும் ஒரு சாதி......பெறுவாரும் ஒரு சாதி
இருவருமே உயர் சாதி...இடமறுப்பின் இழி சாதி
இதுவே அவ்வை கூறுகின்ற..இரண்டு சாதி என்போமா !!!
This is my own poem. - Thanks for reading it
Gopal
மௌன மொழி பேசுவதை
ReplyDeleteஎன்னவென்று கேளுங்கள்-wonderful
இது அன்றி அது இல்லை
இனம் பிரித்துப் பார்ப்பதில்லை-class
ஆழ்கடலும் அளித்திடுமே
வான்முகிலை வாழவைக்க.-wow
எல்லோரும் ஓரினம் என்கின்ற வாதம்
இயற்கையின் இயல்புக்கு என்றும் விரோதம்-correct
சிதைந்து உயிர் பிரிந்துவிட்டால் சேர்ந்துவிடும் ஓரினம்-super
I jus loved it peripa!