Thursday, October 14, 2010

இல்லை


இல்லை என்ற சொல்லினிற்கு
இடமில்லை என்றிருந்தால்
இல்லாமை இல்லாத
நிலையில் நாம் இருந்திருந்தால்..
காரியில்லை பாரியில்லை
கடைஎழு வள்ளலில்லை
கை சிவக்கக் கொடைகொடுத்த
கர்ண மஹா பிரபு இல்லை
பத்தும் பறக்கவிடும்
பசியென்று ஒன்றில்லை
செத்தும் கொடுத்தவனாம்
சீதக்காதிக்கு சிறப்பில்லை
முப்பாலில் முதலிரண்டை
தப்பாமல் படித்து வந்த
தலைமுறையும் இனி இல்லை
பொருளுக்குப் பொருள் இல்லை
பொருள் ஈட்டும் போரில்லை
அறத்துக்கும் பொருளுக்கும்
அர்த்தம்சொல்ல ஆருமில்லை
பொருள் வேண்டித் துதிபாடி
புறங் கூறும் புலவரில்லை
அருள் வேண்டி ஆண்டவனைத்
தொழுவோரும் இனி இல்லை
ஆதாயம் வேண்டி ஆட்சிபீடம் ஏறுதற்கு
அடிதடி சண்டையிடும் அரசியலும் இனி இல்லை

இல்லாமை கொல்லாமை இடிபாடு குறைபாடு
ஏதுமே இல்லாத வாழ்வும் ஒர் வாழ்வில்லை

மாற்றமே இல்லாத மறுமை ஒரு மாயை
இம்சைகள் நிறைந்திட்ட இம்மையே உண்மை.

Note: -
ஒரு வார்த்தையை நினைத்துகொண்டு
அதில் பாட்டு எழுத முற்பட்டத்தின் விளைவு
இந்த so called கவிதை வரிகள்.
gopal

2 comments:

  1. இல்லை என்ற சொல் இல்லை எனில்
    உன்களுடைய கவிதை ப்ளோகில் இல்லை!

    This was really wonderful...

    சிலது இல்லை என்பதினால் என்னலாம் இர்ருந்திருகிறது என்பதற்கு எடுத்துகாட்டு..
    Thank You :-))

    ReplyDelete
  2. Dear Archana,
    I just happened see today the comments of yours that was sent so long back. It is because I never knew that readers also reply. - I have to learn a lot. I am so happy you read these with interest. But Why din't you tell me when we met even if you din't over phone. Thanks a lot as your comments encourages me to pursue further.
    Hope Sathya too reads and writes in tamil. Convey my wishes to him.
    with love,
    Gopal periappa.

    ReplyDelete